ஹதீஸ்கள்
#547
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் என் தந்தையும் அபூபர்ஸா (நள்லா பின் உபைத்-ர-) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களிடம் என் தந்தை, “கடமையான தொழுகையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபர்ஸா (ரலி) அவர்கள், “-நீங்கள் முதல் தொழுகை என்று அழைக்கும்- நண்பகல் (லுஹ்ர்) தொழுகையைச் சூரியன் (நடுவானி-ருந்து மேற்கு நோக்கி) சாயும்போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். (பின்னர்) அஸ்ர் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸ்ர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக்கோடி யிலுள்ள தமது இல்லத்திற்குத் திரும்பி சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெளிச்சம் குறையாமல்) தெளிவாக இருந்துகொண்டிருக்கும்” என்று கூறினார்கள். -அறிவிப்பாளர் சய்யார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மஃக்ரிப் (தொழுகையின் நேரம்) பற்றி அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள்; ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன். தொடர்ந்து அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘அல்அ(த்)தமா’ என்று நீங்கள் அழைக்கும் இஷா தொழுகையைத் தாமதப்படுத்துவதையே நபி (ஸல்) அவர்கள் விரும்புவார்கள். இஷா தொழு கைக்குமுன் உறங்குவதையும் இஷா தொழுகைக்குப்பின் பேசிக்கொண்டிருப் பதையும் நபி (ஸல்) அவர்கள் வெறுப் பார்கள். (எங்களில்) ஒருவர் தமக்குப் பக்கத்தி-ருப்பவரை அறிந்துகொள்ளும் (அளவுக்கு வெளிச்சம் வந்துவிடும்) நேரத்தில் வைகறை (சுப்ஹு) தொழுகையை முடித்துத் திரும்புவார்கள். (வைகறைத் தொழுகையில்) அறுபது (வசனங்கள்) முதல் நூறு (வசனங்கள்)வரை ஓதுவார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل، قال اخبرنا عبد الله، قال اخبرنا عوف، عن سيار بن سلامة، قال دخلت انا وابي، على ابي برزة الاسلمي، فقال له ابي كيف كان رسول الله صلى الله عليه وسلم يصلي المكتوبة فقال كان يصلي الهجير التي تدعونها الاولى حين تدحض الشمس، ويصلي العصر، ثم يرجع احدنا الى رحله في اقصى المدينة والشمس حية ونسيت ما قال في المغرب وكان يستحب ان يوخر العشاء التي تدعونها العتمة، وكان يكره النوم قبلها والحديث بعدها، وكان ينفتل من صلاة الغداة حين يعرف الرجل جليسه، ويقرا بالستين الى الماية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #547
- Book Index
- 24
Grades
- -
