ஹதீஸ்கள்
#546
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: சூரிய ஒளி எனது அறைக்குள் விழுந்துகொண்டும் நிழல் இன்னும் (கிழக்குப் பக்கச் சுவரில்) விழாமலும் உள்ள நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுவார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மா-க் (ரஹ்), யஹ்யா பின் சயீத் (ரஹ்), ஷுஐப் பின் அபீஹம்ஸா (ரஹ்), இப்னு அபீஹஃப்ஸா (முஹம்மத் பின் மைஸரா அல்பஸரீ- ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், ‘சூரிய ஒளி (முற்றாக) அகலாத நிலையில்’ என்று இடம்பெற்றுள்ளது.8 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال اخبرنا ابن عيينة، عن الزهري، عن عروة، عن عايشة، قالت كان النبي صلى الله عليه وسلم يصلي صلاة العصر والشمس طالعة في حجرتي لم يظهر الفىء بعد. وقال مالك ويحيى بن سعيد وشعيب وابن ابي حفصة والشمس قبل ان تظهر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #546
- Book Index
- 23
Grades
- -
