ஹதீஸ்கள்
#543
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸ்ரையும் (சேர்த்து) எட்டு ரக்அத்களாகவும் மஃக்ரிபையும் இஷா வையும் (சேர்த்து) ஏழு ரக்அத்களாகவும் தொழு(வித்)தார்கள். இதன் அறிவிப்பாளரான ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடம் அய்யூப் அஸ் ஸக்தியானீ (ரஹ்) அவர்கள், “இ(வ்வாறு சேர்த்துத் தொழுத)து மழைக் காலத்தில் நடந்திருக்கலாமோ?” என்று கேட்டார்கள். அதற்கு ஜாபிர் (ரஹ்) அவர்கள் ‘இருக் கலாம்’ என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو النعمان، قال حدثنا حماد هو ابن زيد عن عمرو بن دينار، عن جابر بن زيد، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم صلى بالمدينة سبعا وثمانيا الظهر والعصر، والمغرب والعشاء. فقال ايوب لعله في ليلة مطيرة. قال عسى
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #543
- Book Index
- 20
Grades
- -
