ஹதீஸ்கள்
#541
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
அபூபர்ஸா நள்லா பின் உபைத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் ஒருவர் தம் பக்கத்தி-ருப்ப வரை அறிந்துகொள்ளும் (அளவுக்கு வெளிச்சம் வந்துவிடும்) நேரத்தில் நபி (ஸல்) அவர்களை சுப்ஹு தொழுவிப்ப வராக இருந்தார்கள். அறுபது (வசனங்கள்) முதல் நூறு (வசனங்கள்)வரை சுப்ஹு தொழுகையில் ஓதுவார்கள். சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல் நேரத்தின்)போது லுஹ்ரை தொழுவிப்பார்கள். அடுத்து எங்களில் ஒருவர் (தொழுது விட்டு) மதீனாவின் கோடியிலுள்ள (தமது இல்லத்துக்குத்) திரும்பிச் சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெப்பம் தணியாமல் வெளிச்சம் குறையாமல்) தெளிவாக இருந்துகொண்டிருக்கும். (அந்த அளவுக்கு நேரம் இருக்கும்போது) அஸ்ர் தொழுவிப்பார்கள். -இதன் அறிவிப்பாளரான அபுல் மின்ஹால் (சய்யார் பின் சலாமா அல்பஸ்ரீ-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மஃக்ரிப் தொழுகை(யின் நேரம்) பற்றி அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள். ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன். “இஷா தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதி(யில் முதல் பகுதி)வரை தாமதப்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் குறையாகக் கருதமாட்டார்கள்” என்று அபுல்மின்ஹால் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்கள். பின்னர் (ஒரு முறை) ‘பாதி இரவுவரை’ என்று அபுல்மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், முஆத் பின் முஆத் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார் கள்: “பின்னர் ஒரு முறை அபுல்மின்ஹால் (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர் ‘அல்லது இரவில் மூன்றில் ஒரு பகுதிவரை’ என்று (ஐயப்பாட்டுடன்) அறிவித்தார்” என ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا حفص بن عمر، قال حدثنا شعبة، عن ابي المنهال، عن ابي برزة، كان النبي صلى الله عليه وسلم يصلي الصبح واحدنا يعرف جليسه، ويقرا فيها ما بين الستين الى الماية، ويصلي الظهر اذا زالت الشمس، والعصر واحدنا يذهب الى اقصى المدينة ثم يرجع والشمس حية، ونسيت ما قال في المغرب، ولا يبالي بتاخير العشاء الى ثلث الليل. ثم قال الى شطر الليل. وقال معاذ قال شعبة ثم لقيته مرة فقال او ثلث الليل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #541
- Book Index
- 18
Grades
- -
