ஹதீஸ்கள்
#540
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த (நண்பகலின்)போது (தமது இல்லத்தி-ருந்து) புறப்பட்டு வந்து லுஹ்ர் தொழு(வித்) தார்கள். பிறகு சொற்பொழிவுமேடை (மிம்பர்) மீதேறி நின்று மறுமை நாளை நினைவூட்டிப் பேசினார்கள். அந்நாளில் அதிர்ச்சியூட்டும் பல சம்பவங்கள் நிகழும் என்று குறிப்பிட்டார்கள். பிறகு (அவர்கள் விரும்பாத பல்வேறு கேள்விகளை மக்கள் வற்புறுத்திக் கேட்டபோது), “(இன்று) யார் எது குறித்துக் கேட்க விரும்பினாலும் கேட்கட்டும். இந்த இடத்தில் நான் இருக்கும்வரை எது குறித்து நீங்கள் என்னிடம் கேட்டாலும் அது குறித்து உங்களுக்கு நான் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன்” என்று (கோபத்துடன்) கூறினார்கள். எனவே, மக்கள் அதிகமாக அழலாயினர். நபி (ஸல்) அவர்களோ, “கேளுங்கள் என்னிடம்” என்று அடிக்கடி கூறிக்கொண்டி ருந்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் எழுந்து, “என் தந்தை யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஹுதாஃபாதான் உம்முடைய தந்தை” என்று பதிலளித்துவிட்டு மீண்டும், “கேளுங்கள் என்னிடம்” என்று அடிக்கடி கூறலானார்கள். (நபியவர்களின் கோபத்தை அறிந்துகொண்ட) உமர் (ரலி) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டோம்” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அமைதியானார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள், “சற்றுமுன் (நான் தொழுதுகொண்டிருந்தபோது) இதோ இந்தச் சுவரில் சொர்க்கமும் நரகமும் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. (இந்த இடத்தில் நான் கண்ட காட்சியைப் போன்று) நன்மையிலும் தீமையிலும் வேறெந்தக் காட்சியையும் நான் (ஒருபோதும்) கண்டதில்லை” என்று கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #540
- Book Index
- 17
Grades
- -