ஹதீஸ்கள்
#531
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தொழுதுகொண்டிருக்கையில் தம் இறைவனுடன் இரகசியமாக உரையாடுகிறார். எனவே, (தொழுதுகொண்டிருக்கும்போது எச்சில் வந்துவிட்டால்) அவர் தமக்கு வலப் பக்கத்தில் உமிழ வேண்டாம். மாறாக, தமது இடப் பாதத்திற்குக் கீழே உமிழட்டும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சயீத் பின் அபீஅரூபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “தமக்கு முன்புறமாகத் துப்பலாகாது. எனினும் தமது இடப் பக்கமோ அல்லது பாதத்துக்குக் கீழேயோ துப்புக” என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது. ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “தமக்கு முன்புறமோ, வலப் பக்கமோ துப்பலாகாது. எனினும், தமது இடப் பக்கமோ அல்லது பாதத்துக்குக் கீழேயோ துப்புக!” என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) காணப் படுகிறது. ஹுமைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “கிப்லா (கஅபா) திசையில் அவர் துப்பலாகாது; தமக்கு வலப் புறமாகவும் துப்பலாகாது. எனினும், அவர் தமக்கு இடப் பக்கமோ அல்லது தமது பாதத்துக்குக் கீழேயோ துப்பட்டும்” என்று கூறப்பட்டுள்ளது.3 அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، قال حدثنا هشام، عن قتادة، عن انس، قال قال النبي صلى الله عليه وسلم " ان احدكم اذا صلى يناجي ربه فلا يتفلن عن يمينه، ولكن تحت قدمه اليسرى ". وقال سعيد عن قتادة لا يتفل قدامه او بين يديه، ولكن عن يساره او تحت قدميه. وقال شعبة لا يبزق بين يديه ولا عن يمينه، ولكن عن يساره او تحت قدمه. وقال حميد عن انس عن النبي صلى الله عليه وسلم " لا يبزق في القبلة ولا عن يمينه، ولكن عن يساره او تحت قدمه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #531
- Book Index
- 10
Grades
- -
