ஹதீஸ்கள்
#530
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
முஹம்மத் பின் முஸ்-ம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: திமஷ்க் (டமாஸ்கஸ்) நகரி-ருந்த அனஸ் (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம், “ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(நபி (ஸல்) அவர்களது காலத் தில் நடைமுறைப்படுத்தப்பட்டு) நான் கண்டவற்றில் இந்தத் தொழுகையைத் தவிர வேறெதையும் (முறையாக நடை முறைப்படுத்தப்படுவதை இன்று) என்னால் காண முடியவில்லை; இந்தத் தொழுகை கூட (உரிய நேரத்தில் நிறைவேற்றப் படாமல்) வீணடிக்கப்பட்டுவிட்டது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عمرو بن زرارة، قال اخبرنا عبد الواحد بن واصل ابو عبيدة الحداد، عن عثمان بن ابي رواد، اخي عبد العزيز قال سمعت الزهري، يقول دخلت على انس بن مالك بدمشق وهو يبكي فقلت ما يبكيك فقال لا اعرف شييا مما ادركت الا هذه الصلاة، وهذه الصلاة قد ضيعت. وقال بكر حدثنا محمد بن بكر البرساني اخبرنا عثمان بن ابي رواد نحوه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #530
- Book Index
- 9
Grades
- -
