ஹதீஸ்கள்
#528
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: உங்களில் ஒருவரது (வீட்டு) வாச-ல் ஆறு ஒன்று (ஓடிக்கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அ(வ்வாறு நீராடுவ)து அவரது (மேனியிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?” என்று கேட்டார்கள். “அவரது (மேனியிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்க விடாது” என்று மக்கள் பதிலளித்தார்கள். “இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இ(வற்றை நிறைவேற்றுவ)தன் மூலம் அல்லாஹ் குற்றங்களைக் களைகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن حمزة، قال حدثني ابن ابي حازم، والدراوردي، عن يزيد، عن محمد بن ابراهيم، عن ابي سلمة بن عبد الرحمن، عن ابي هريرة، انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " ارايتم لو ان نهرا بباب احدكم، يغتسل فيه كل يوم خمسا، ما تقول ذلك يبقي من درنه ". قالوا لا يبقي من درنه شييا. قال " فذلك مثل الصلوات الخمس، يمحو الله بها الخطايا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #528
- Book Index
- 7
Grades
- -
