ஹதீஸ்கள்
#527
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
வலீத் பின் அல்அய்ஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் இல்லத்தை நோக்கி சைகை செய்தவாறு அபூஅம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதோ இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) என்னிடம் தெரிவித்தார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?” என்று கேட்டேன். அவர்கள், “உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது” என்றார்கள். “பிறகு எது?” என்று கேட்டேன். “தாய் தந்தையருக்கு நன்மை புரிவது” என்றார்கள். “பிறகு எது?” என்றேன். அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது” என்று பதிலளித்தார்கள். இ(ம் மூ)வற்றை மட்டுமே என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் கேட்டிருந்தால், எனக்கு இன்னும் அதிகமாகப் பதிலளித்திருப்பார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، هشام بن عبد الملك قال حدثنا شعبة، قال الوليد بن العيزار اخبرني قال سمعت ابا عمرو الشيباني، يقول حدثنا صاحب، هذه الدار واشار الى دار عبد الله قال سالت النبي صلى الله عليه وسلم اى العمل احب الى الله قال " الصلاة على وقتها ". قال ثم اى قال " ثم بر الوالدين ". قال ثم اى قال " الجهاد في سبيل الله ". قال حدثني بهن ولو استزدته لزادني
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #527
- Book Index
- 6
Grades
- -
