ஹதீஸ்கள்
#526
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ஒரு (அந்நியப்) பெண்ணை முத்தமிட்டுவிட்டார். அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைச் சொன்னார். அப்போது அல்லாஹ், “(நபியே!) பக-ன் இரு முனைகளிலும் இரவில் சில பகுதிகளிலும் தொழுகையைப் கடைப் பிடிப்பீராக. நிச்சயமாக நன்மைகள் தீமைகளைப் போக்கிவிடும்” (11:114) எனும் வசனத்தை அருளினான். அந்த மனிதர், “இது எனக்கு மட்டுமா, அல்லாஹ்வின் தூதரே! (அல்லது அனை வருக்குமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(இதன்படி செயல்படும்) என் சமுதாயத்தார் அனைவருக்கும்தான்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة، قال حدثنا يزيد بن زريع، عن سليمان التيمي، عن ابي عثمان النهدي، عن ابن مسعود، ان رجلا، اصاب من امراة قبلة، فاتى النبي صلى الله عليه وسلم فاخبره، فانزل الله {اقم الصلاة طرفى النهار وزلفا من الليل ان الحسنات يذهبن السييات}. فقال الرجل يا رسول الله الي هذا قال " لجميع امتي كلهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #526
- Book Index
- 5
Grades
- -
