ஹதீஸ்கள்
#525
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது உமர் (ரலி) அவர்கள், “உங்களில் யார் (இனி தலைதூக்கவிருக்கும்) ‘ஃபித்னா’ (சோதனை அல்லது குழப்பம்) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை நினைவில் வைத்திருக்கி றார்?” என்று கேட்டார்கள். நான், “நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நான் அதை நினைவில் வைத்திருக்கிறேன்” என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், “(அதைக் கூறுங்கள்) நீங்கள்தான் ‘நபி (ஸல்) அவர்களிடம்’ அல்லது ‘(நபி (ஸல்) அவர்களின்) அக்கூற்றைப் பற்றி’ துணிச்சலுடன் (கேள்வி கேட்டு விளக்கம் பெறக்கூடியவராய்) இருந்தீர்கள்” என்று சொன்னார்கள். நான், “ஒரு மனிதன் (இறைவழிபாட்டில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு) தன் குடும்பத்தார், சொத்து, பிள்ளைகள் ஆகியோரின் விஷயத்தில் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலமும்), தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) ‘ஃபித்னா’வில் (சோதனையில்) ஆழ்த்தப்படுவார். அப்போது தொழுகை, நோன்பு, தர்மம், நன்மை புரியும்படி கட்டளையிட்டு தீமையி-ருந்து தடுத்தல் ஆகியவை அதற்கான பரிகாரமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றேன். உமர் (ரலி) அவர்கள், “நான் (‘சோதனை’ எனும் பொருள் கொண்ட ஃபித்னாவான) இதை(ப் பற்றி)க் கேட்கவில்லை. கடல் அலையைப் போன்று, அடுக்கடுக்காக ஏற்படக் கூடிய (நபி (ஸல்) அவர்களால் முன்னேறிவிப்புச் செய்யப்பட்ட ‘குழப்பம்’ எனும் பொருள் கொண்ட) ‘ஃபித்னா’வைப் பற்றியே கேட்கிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு நான், “இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே! அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. (உங்கள் காலத்தில் அவற்றில் எதுவும் தலைதூக்கப் போவதில்லை.) உங்களுக்கும் அவற்றுக்கும் இடையே மூடப்பட்ட கதவொன்று உள்ளது” என்று கூறினேன். “அந்தக் கதவு உடைக்கப்படுமா? அல்லது திறக்கப்படுமா” என்று கேட்டார் கள். நான், “இல்லை, அது உடைக்கப்படும்” என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவ்வாறாயின், (அது உடைக்கப்பட்டுவிட்டால் பின்னர் மறுமை நாள்வரை) ஒருபோதும் அது மூடப் படாது” என்று சொன்னார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) நாங்கள் (ஹுதைஃபா (ரலி) அவர்களிடம்), “உமர் (ரலி) அவர்கள் அந்தக் கதவு எதுவென்று அறிந்திருந்தார்களா?” என்று கேட்டோம். ஹுதைஃபா (ரலி) அவர்கள், “ஆம்; பகலுக்குமுன் இரவு உண்டு என்பதை அறிவதைப் போன்று உமர் (ரலி) அவர்கள் அதை அறிந்திருந்தார்கள். (ஏனெனில்,) பொய்கள் கலவாத செய்தியையே அவருக்கு நான் அறிவித்திருந்தேன்” என்று பதிலளித்தார்கள். அந்தக் கதவு எதுவென ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே, மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்களை (ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் அது குறித்து)க் கேட்கச் சொன்னோம். மஸ்ரூக் அவர்கள் கேட்டதற்கு “(அந்தக் கதவு) உமர் (ரலி) அவர்கள்தான்” என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى، عن الاعمش، قال حدثني شقيق، قال سمعت حذيفة، قال كنا جلوسا عند عمر رضى الله عنه فقال ايكم يحفظ قول رسول الله صلى الله عليه وسلم في الفتنة قلت انا، كما قاله. قال انك عليه او عليها لجريء. قلت " فتنة الرجل في اهله وماله وولده وجاره تكفرها الصلاة والصوم والصدقة والامر والنهى ". قال ليس هذا اريد، ولكن الفتنة التي تموج كما يموج البحر. قال ليس عليك منها باس يا امير المومنين، ان بينك وبينها بابا مغلقا. قال ايكسر ام يفتح قال يكسر. قال اذا لا يغلق ابدا. قلنا اكان عمر يعلم الباب قال نعم، كما ان دون الغد الليلة، اني حدثته بحديث ليس بالاغاليط. فهبنا ان نسال حذيفة، فامرنا مسروقا فساله فقال الباب عمر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #525
- Book Index
- 4
Grades
- -
