ஹதீஸ்கள்
#523
ஸஹீஹ் அல்-புகாரீ - Times of the Prayers
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அப்துல் கைஸ்’ குலத்தாரின் தூதுக்குழு ஒன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தது. அக்குழுவினர், “(அல்லாஹ்வின் தூதரே!) நாங்கள் ‘ரபீஆ’ குலத்தாரில் இன்ன (அப்துல் கைஸ்) குடும்பத்தார் ஆவோம். (முளர் குலத்து இறைமறுப்பாளர்கள் நாம் சந்திக்கத் தடையாக உள்ளனர். போர் நிறுத்தம் செய்யப்படுகின்ற புனித மாதங்களில் தவிர வேறு மாதங்களில் நாங்கள் தங்களிடம் வந்து சேர முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே, (தெளிவான) ஆணை யொன்றை எங்களுக்குப் பிறப்பியுங்கள். அதை உங்களிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொள்வோம்; எங்களுக்குப் பின்னாலிருப்பவர்களையும் அதன்பால் அழைப்போம்” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு நான்கு விஷயங்களைச் செய்யும்படி கட்டளையிடுகிறேன்; நான்கு விஷயங்களைச் செய்ய வேண்டாமெனத் தடைவிதிக்கிறேன்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது -அதாவது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று உறுதிகூறுவது- தொழுகையைக் கடைப்பிடிப்பது, ஸகாத் வழங்குவது, உங்களுக்குப் போரில் கிடைத்த செல்வத்தி-ருந்து ஐந்திலொரு பங்கை (இறைவனுக்காக) என்னிடம் செலுத்துவது ஆகியவைதான் நான் கட்டளையிடும் அந்த நான்கு விஷயங்கள். மேலும், (மது ஊற்றிவைக்கப் பயன்படுத்தப்படும்) சுரைக்காய் குடுவை, மண்சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம், (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கிறேன்” என்று கூறினார்கள்.2 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، قال حدثنا عباد هو ابن عباد عن ابي جمرة، عن ابن عباس، قال قدم وفد عبد القيس على رسول الله صلى الله عليه وسلم فقالوا انا من هذا الحى من ربيعة، ولسنا نصل اليك الا في الشهر الحرام، فمرنا بشىء ناخذه عنك، وندعو اليه من وراءنا. فقال " امركم باربع، وانهاكم عن اربع الايمان بالله ثم فسرها لهم شهادة ان لا اله الا الله، واني رسول الله، واقام الصلاة، وايتاء الزكاة، وان تودوا الى خمس ما غنمتم، وانهى عن الدباء والحنتم والمقير والنقير
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Times of the Prayers
- Hadith Index
- #523
- Book Index
- 2
Grades
- -
