ஹதீஸ்கள்
#348
ஸஹீஹ் அல்-புகாரீ - Rubbing hands and feet with dust (Tayammum)
இம்ரான் பின் ஹுஸைன் அல்குஸாஈ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் மக்களுடன் சேர்ந்து தொழாமல் தனியே விலகி இருப்பதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ன மனிதரே! மக்களுடன் சேர்ந்து நீர் ஏன் தொழவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது; (குளிக்க) தண்ணீர் இல்லை (எனவேதான், மக்களைவிட்டு விலகியிருக்கிறேன்)” என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மண்ணைப் பயன்படுத்துவீராக. அ(தனால் தயம்மும் செய்வ)தே உமக்குப் போதும்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا عبدان، قال اخبرنا عبد الله، قال اخبرنا عوف، عن ابي رجاء، قال حدثنا عمران بن حصين الخزاعي، ان رسول الله صلى الله عليه وسلم راى رجلا معتزلا لم يصل في القوم فقال " يا فلان ما منعك ان تصلي في القوم ". فقال يا رسول الله، اصابتني جنابة ولا ماء. قال " عليك بالصعيد فانه يكفيك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Rubbing hands and feet with dust (Tayammum)
- Hadith Index
- #348
- Book Index
- 15
Grades
- -
