ஹதீஸ்கள்
#345
ஸஹீஹ் அல்-புகாரீ - Rubbing hands and feet with dust (Tayammum)
அபூவாயில் (ஷகீக் பின் சலமா- ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “(குளியல் கடமை யான ஒருவருக்குத்) தண்ணீர் கிடைக்கா விட்டால், அவர் தொழ வேண்டா மல்லவா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “(ஆம்; தொழ வேண்டிய தில்லை.) இந்த விஷயத்தில் நான் சலுகையளித்தால், சிறிது குளிர் இருந்தால் கூட (அதைக் காரணம் காட்டி) மக்கள் இப்படி - தயம்மும் - செய்து கொண்டு தொழ ஆரம்பித்துவிடுவார்கள்” என்று கூறினார்கள். அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள், “அப்படியானால், அம்மார் (பின் யாசிர்- ர-) அவர்கள், உமர் (பின் அல்கத்தாப் -ர-) அவர்களிடம் சொன்ன (‘தண்ணீர் கிடைக்காதபோது தயம்மும் செய்தால் போதும்’ என்பது பற்றிய) கூற்று எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “அம்மாரின் சொல்லைக் கேட்டு உமர் (ரலி) அவர்கள் மனநிறைவு கொள்ளவில்லை என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا بشر بن خالد، قال حدثنا محمد هو غندر عن شعبة، عن سليمان، عن ابي وايل، قال قال ابو موسى لعبد الله بن مسعود اذا لم يجد الماء لا يصلي. قال عبد الله لو رخصت لهم في هذا، كان اذا وجد احدهم البرد قال هكذا يعني تيمم وصلى قال قلت فاين قول عمار لعمر قال اني لم ار عمر قنع بقول عمار
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Rubbing hands and feet with dust (Tayammum)
- Hadith Index
- #345
- Book Index
- 12
Grades
- -
