ஹதீஸ்கள்
#336
ஸஹீஹ் அல்-புகாரீ - Rubbing hands and feet with dust (Tayammum)
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் (தம் சகோதரி) அஸ்மா (ரலி) அவர்களிடமிருந்து (கழுத்து) மாலையொன்றை இரவல் வாங்கினார்கள். அது (பனூ முஸ்த-க் போர் பயணத்தில் எப்படியோ) தொலைந்து போய்விட்டது. (இதையறிந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதைத் தேடுவதற்காக) ஒருவரை (நண்பர்களுடன்) அனுப்பிவைத்தார்கள். அவரும் அதை(த் தேடி)க் கண்டுபிடித்தார். (இதற்கிடையே தேடிப்போன) அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டது. அப்போது அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. (தண்ணீர் கிடைக்காததால்) அவர்கள் (அங்கத் தூய்மை செய்யாமலேயே) தொழுதுவிட்டார்கள். (திரும்பி வந்ததும்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது குறித்து முறையிட்டனர். அப்போதுதான் ‘தயம்மும்’ தொடர்பான வசனத்தை (4:43) அல்லாஹ் அருளினான். ஆகவே, (இந்தச் சலுகை கிடைக்கக் காரணமாய் அமைந்த) ஆயிஷா (ரலி) அவர்களிடம் உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிக்கட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் வெறுக்கும் ஒன்று உங்களுக்கு நேரும்போதெல்லாம் அதில் உங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு நன்மையை அல்லாஹ் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை” என்று சொன்னார்கள்.2 அத்தியாயம் :
حدثنا زكرياء بن يحيى، قال حدثنا عبد الله بن نمير، قال حدثنا هشام بن عروة، عن ابيه، عن عايشة، انها استعارت من اسماء قلادة فهلكت، فبعث رسول الله صلى الله عليه وسلم رجلا، فوجدها فادركتهم الصلاة وليس معهم ماء فصلوا، فشكوا ذلك الى رسول الله صلى الله عليه وسلم فانزل الله اية التيمم. فقال اسيد بن حضير لعايشة جزاك الله خيرا، فوالله ما نزل بك امر تكرهينه الا جعل الله ذلك لك وللمسلمين فيه خيرا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Rubbing hands and feet with dust (Tayammum)
- Hadith Index
- #336
- Book Index
- 3
Grades
- -
