ஹதீஸ்கள்
#334
ஸஹீஹ் அல்-புகாரீ - Rubbing hands and feet with dust (Tayammum)
நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பயணம் ஒன்றில் (பனூ முஸ்த-க் போரின் பயணத்தில்) அவர் களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் (மதீனாவுக்கருகில் உள்ள) ‘பைதா’ அல்லது ‘தாத்துல் ஜைஷ்’ எனுமிடத்தில் (வந்து கொண்டு) இருந்தபோது. எனது கழுத்தணி அவிழ்ந்து (காணாமற்போய்)விட்டது. அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு முகாமிட் டுத்) தங்கினார்கள். அவர்களுடன் மக்க ளும் (முகாமிட்டுத்) தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை; (அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை.) அப்போது மக்கள் (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களிடம் சென்று, “(உங்கள் புதல்வி) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்துவிட்டார்கள். இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை” என்று முறையிட்டனர். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), “அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்துவிட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை” என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்- என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது (தலைவைத்துப் படுத்து) இருந்ததுதான் என்னை அசையவிடாமல் (அடிவாங்கிக் கொண்டிருக்கும்படி) செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்தபோதும் தண்ணீர் இருக்கவில்லை. அப்போதுதான் ‘தயம்மும்’ உடைய (5:6ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இது குறித்து) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், “அபூபக்ரின் குடும்பத் தாரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத் (சமுதாய நலன்)களில் இது (தயம்மும் எனும் சலுகை) முதலாவதாக இல்லை. (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன)” என்று கூறினார்கள். (பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பியபோது, அதன் அடியில் (காணா மற்போன) அந்தக் கழுத்தணி கிடந்தது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن عبد الرحمن بن القاسم، عن ابيه، عن عايشة، زوج النبي صلى الله عليه وسلم قالت خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في بعض اسفاره، حتى اذا كنا بالبيداء او بذات الجيش انقطع عقد لي، فاقام رسول الله صلى الله عليه وسلم على التماسه، واقام الناس معه، وليسوا على ماء، فاتى الناس الى ابي بكر الصديق فقالوا الا ترى ما صنعت عايشة اقامت برسول الله صلى الله عليه وسلم والناس، وليسوا على ماء، وليس معهم ماء. فجاء ابو بكر ورسول الله صلى الله عليه وسلم واضع راسه على فخذي قد نام فقال حبست رسول الله صلى الله عليه وسلم والناس، وليسوا على ماء، وليس معهم ماء. فقالت عايشة فعاتبني ابو بكر، وقال ما شاء الله ان يقول، وجعل يطعنني بيده في خاصرتي، فلا يمنعني من التحرك الا مكان رسول الله صلى الله عليه وسلم على فخذي، فقام رسول الله صلى الله عليه وسلم حين اصبح على غير ماء، فانزل الله اية التيمم فتيمموا. فقال اسيد بن الحضير ما هي باول بركتكم يا ال ابي بكر. قالت فبعثنا البعير الذي كنت عليه، فاصبنا العقد تحته
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Rubbing hands and feet with dust (Tayammum)
- Hadith Index
- #334
- Book Index
- 1
Grades
- -
