ஹதீஸ்கள்
#319
ஸஹீஹ் அல்-புகாரீ - Menstrual Periods
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களுடன் நாங்களும் சென் றோம். எங்களில் சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினர். வேறுசிலர் ஹஜ்ஜுக் காக இஹ்ராம் கட்டினர். நாங்கள் மக்காவை அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்களில்) யார் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டுவராமல் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் (உம்ராவின் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு) இஹ்ராமி-ருந்து விலகிக்கொள்ளலாம். யார் தம்முடன் குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்து இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் தமது குர்பானிப் பிராணியை அறுக்கும் (துல்ஹஜ் பத்தாம்) நாள்வரை தமது இஹ்ராமி-ருந்து விலக வேண்டாம். (உங்களில்) யார் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் தமது ஹஜ்ஜை நிறைவு செய்யட்டும்” என்று சொன்னார்கள். (இந்நிலையில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருந்த) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் ஆகும்வரை நான் மாதவிடாயில் நீடித்தேன். அப்போது நான் உம்ராவிற்காகவே இஹ்ராம் கட்டியிருந்தேன். (இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டபோது) எனது தலைமுடியை அவிழ்த்து தலை வாரிக் கொள்ளும்படியும் உம்ராவை விட்டுவிட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளு மாறும் என்னைப் பணித்தார்கள். அவ்வாறே நான் செய்து எனது ஹஜ்ஜை நிறைவுசெய்தேன். பின்னர் என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை அனுப்பி ‘தன்ஈம்’ எனும் இடத்தி-ருந்து (புறப்பட்டு) எனது (விட்டுப்போன) உம்ரா வுக்காக உம்ரா செய்துகொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் என்னைப் பணித்தார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، قال حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، عن عروة، عن عايشة، قالت خرجنا مع النبي صلى الله عليه وسلم في حجة الوداع، فمنا من اهل بعمرة، ومنا من اهل بحج، فقدمنا مكة فقال رسول الله صلى الله عليه وسلم " من احرم بعمرة ولم يهد فليحلل، ومن احرم بعمرة واهدى فلا يحل حتى يحل بنحر هديه، ومن اهل بحج فليتم حجه ". قالت فحضت فلم ازل حايضا حتى كان يوم عرفة، ولم اهلل الا بعمرة، فامرني النبي صلى الله عليه وسلم ان انقض راسي وامتشط، واهل بحج، واترك العمرة، ففعلت ذلك حتى قضيت حجي، فبعث معي عبد الرحمن بن ابي بكر، وامرني ان اعتمر مكان عمرتي من التنعيم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #319
- Book Index
- 24
Grades
- -
