ஹதீஸ்கள்
#266
ஸஹீஹ் அல்-புகாரீ - Bathing (Ghusl)
மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பதற்காகத் தண்ணீர் வைத்து, அவர்களுக்குத் திரையிட்டேன். அப்போது அவர்கள் தமது கையில் தண்ணீர் ஊற்றி, அதை ‘ஒரு முறை’ அல்லது ‘இரு முறை’ கழுவினார்கள் -“அறிவிப்பாளர் சா-ம் பின் அபில் ஜஅத் (ரஹ்) அவர்கள் ‘மூன்று முறை’ என்றும் சொன்னார்களா அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரிய வில்லை” என சுலைமான் (பின் மிஹ்ரான் அல்அஃமஷ் - ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். - பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கையால் (நீர் அள்ளி) இடக் கையின் மீது ஊற்றி தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள், பிறகு தமது (இடக்) கையை ‘பூமியில்’ அல்லது ‘சுவரில்’ தேய்த்துக் கழுவினார்கள். பிறகு வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள்; முகத்தையும் (முழங்கைவரை) இரண்டு கைகளையும் கழுவினார்கள்; தலையையும் கழுவினார்கள்; பிறகு உடம்பில் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள். அப்போது (துடைக்க) அவர்களுக்கு ஒரு துண்டை எடுத்துக்கொடுத்தேன். அப்போது ‘வேண்டாம்’ என்பதுபோல் தமது கையால் சைகை செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، قال حدثنا ابو عوانة، حدثنا الاعمش، عن سالم بن ابي الجعد، عن كريب، مولى ابن عباس عن ابن عباس، عن ميمونة بنت الحارث، قالت وضعت لرسول الله صلى الله عليه وسلم غسلا وسترته، فصب على يده، فغسلها مرة او مرتين قال سليمان لا ادري اذكر الثالثة ام لا ثم افرغ بيمينه على شماله، فغسل فرجه، ثم دلك يده بالارض او بالحايط، ثم تمضمض واستنشق، وغسل وجهه ويديه، وغسل راسه، ثم صب على جسده، ثم تنحى فغسل قدميه، فناولته خرقة، فقال بيده هكذا، ولم يردها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Bathing (Ghusl)
- Hadith Index
- #266
- Book Index
- 19
Grades
- -
