ஹதீஸ்கள்
#112
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அறியாமைக் காலத்தில்) தம் குலத்தாரில் ஒருவரைக் கொலை செய்ததற்குப் பதிலாக மக்கா வெற்றி ஆண்டில் ‘பனூ லைஸ்’ குலத்தைச் சேர்ந்த ஒருவரை ‘குஸாஆ’ குலத்தார் கொலை செய்துவிட்டனர். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே நபியவர்கள் தமது ஊர்தியில் ஏறி (அமர்ந்து), உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) “இந்த(ப் புனித மக்கா) நகரைவிட்டு ‘யானைப் படையை’ அல்லது ‘கொலையை’ அல்லாஹ் தடுத்துவிட்டான். மக்காவாசிகள்மீது அல்லாஹ் தன் தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக் கும் அதிகாரம் அளித்தான். எச்சரிக்கை! மக்காவில் போர் செய்வது எனக்கு முன்னர் யாருக்கும் அனுமதிக்கப்பட்ட தில்லை; எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதிக்கப்படப் போவதுமில்லை. நினைவில் கொள்க! எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் போர் புரியவே அனுமதி கிடைத்தது. எச்சரிக்கை! இங்கு போர் செய்வது இந்த நிமிடத்திலிருந்து (முற்றாகத்) தடை செய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்நகரின் முட்செடி பிடுங்கப் படக் கூடாது; இங்குள்ள மரம் வெட்டப் படக் கூடாது. இங்கே தவறி விழும் பொருட்களை (அவற்றைப் பற்றி மக்களுக்கு) அறிவிப்புச் செய்பவரைத் தவிர (வேறு யாரும்) எடுக்கக் கூடாது. (இனிமேல்) எவரேனும் கொலை செய்யப் பட்டுவிட்டால், அவருடைய உறவினர்கள் இழப்பீடு பெறுதல், அல்லது பழிவாங்குதல் ஆகிய இரு யோசனைகளில் சிறந்ததைத் தேர்வு செய்யலாம்” என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் (அபூஷாஹ் எனும்) ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (இந்த உரையை) எனக்கு எழுதித்தரச் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். உடனே நபி (ஸல்) அவர்கள், “இன்ன மனிதரின் தந்தைக்கு (அபூஷாஹிற்கு) எழுதிக்கொடுங்கள்” என்றார்கள். அப்போது குறைஷியரில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! (மக்காவின் செடிகொடிகளை வெட்டக் கூடாது என்பதிலிருந்து வாசனைத் தாவரமான) ‘இத்கிர்’ புல்லுக்கு விதிவிலக்கு அளியுங்கள்; ஏனெனில், நாங்கள் அதை எங்கள் வீடுகளி(ன் கூரைகளி)லும் எங்கள் மண்ணறைகளிலும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘இத்கிர் புல்லைத் தவிர’ என்று சொன்னார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்: (இந்த ஹதீஸின் மூலத்தில் சில பிரதிகளில் உள்ள ‘அய்யுஃபாத’ எனும் சொல்) ‘அய்யுகாத’ என்றும் வாசிக்கப்படுகிறது. என்னிடம், “(அபூஷாஹ் எனும்) அவருக்கு எதை எழுதிக்கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?” என்று கேட்கப்பட்டது. நான், “நபி (ஸல்) அவர்கள் ஆற்றிய இந்த உரையைத்தான் (எழுதித் தரச்சொன்னார்கள்)” என்று பதிலளித்தேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #112
- Book Index
- 54
Grades
- -