ஹதீஸ்கள்
#104
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
சயீத் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் பின் சயீத், (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக) மக்காவை நோக்கிப் படைகளை அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறினார்கள்: தலைவரே! எனக்கு அனுமதி அளியுங்கள்! மக்கா வெற்றிக்கு மறுநாள் நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன்: என் காதுகள் அதைக் கேட்டிருக்கின்றன; என் உள்ளம் அதை நினைவில் வைத்துள்ளது. நபியவர்கள் உரையாற்றியபோது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அவ்வுரையில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, “அல்லாஹ் தான் மக்கா நகருக்குப் புனிதத்தை வழங்கினான். மனிதர்கள் அதற்குப் புனிதத்தை வழங்கவில்லை. எனவே, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எவருக்கும் இங்கே (சண்டையிட்டு) இரத்தத்தைச் சிந்துவதோ இங்குள்ள மரங்களை வெட்டுவதோ அனுமதிக்கப் படவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில், ஒரு பகல் பொழுது மட்டும்) இங்கு போரிட்டதனால் (அதை ஆதாரமாகக் கொண்டு) இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், “அல்லாஹ் தன் தூதருக்கு (மட்டும்) அனுமதியளித்தான்; உங்களுக்கு அவன் அனுமதி வழங்கவில்லை” என்று சொல்லி விடுங்கள். “எனக்குக்கூட (நேற்றைய) பகல் பொழுது மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதியளித்தான். நேற்று இருந்ததைப் போன்றே, இன்று அதன் புனிதம் திரும்ப வந்து விட்டது. (நாம் சொன்ன விஷயங் கள் யாவற்றையும் இங்கு) வந்திருப்பவர் கள் வராதவர்களுக்குத் சொல்லிவிடுங் கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அதற்கு அம்ர் பின் சயீத் என்ன பதிலளித்தார்?” என்று அபூஷுரைஹ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு “அபூஷுரைஹே! உம்மைவிட (இதைப் பற்றி) நான் நன்கு அறிவேன்; நிச்சயமாக (புனித நகரமான) மக்கா குற்றவாளிக்கும் மரண தண்டனைக்குப் பயந்து (மக்காவுக்குள்) ஓடிவந்தவனுக்கும், திருட்டுக் குற்றம் புரிந்துவிட்டு ஓடிவந்தவனுக்கும் பாதுகாப்பளிக்காது” என்று அம்ர் கூறினார் என்றார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال حدثني الليث، قال حدثني سعيد، عن ابي شريح، انه قال لعمرو بن سعيد وهو يبعث البعوث الى مكة ايذن لي ايها الامير احدثك قولا قام به النبي صلى الله عليه وسلم الغد من يوم الفتح، سمعته اذناى ووعاه قلبي، وابصرته عيناى، حين تكلم به، حمد الله واثنى عليه ثم قال " ان مكة حرمها الله، ولم يحرمها الناس، فلا يحل لامري يومن بالله واليوم الاخر ان يسفك بها دما، ولا يعضد بها شجرة، فان احد ترخص لقتال رسول الله صلى الله عليه وسلم فيها فقولوا ان الله قد اذن لرسوله، ولم ياذن لكم. وانما اذن لي فيها ساعة من نهار، ثم عادت حرمتها اليوم كحرمتها بالامس، وليبلغ الشاهد الغايب ". فقيل لابي شريح ما قال عمرو قال انا اعلم منك يا ابا شريح، لا يعيذ عاصيا، ولا فارا بدم، ولا فارا بخربة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #104
- Book Index
- 46
Grades
- -
