ஹதீஸ்கள்
#65
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (கிழக்கு ரோமானிய அரசுக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்து) கடிதம் ஒன்றை ‘எழுதச் சொன்னார்கள்’ அல்லது ‘எழுத விரும்பினார்கள்’. அப்போது “அவர்கள் (ரோமர்கள்) முத்திரையிடப்படாத எந்தக் கடிதத்தையும் படிக்க மாட்டார்கள்” என்று நபியவர்களிடம் சொல்லப்பட்டது. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் வெள்ளியாலான மோதிரம் ஒன்றைத் தயாரித் துக்கொண்டார்கள். அதில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ (அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்) என்று (இலச்சினை) பொறிக்கப்பட்டிருந்தது. இப்போதும் நான் அவர்களது கரத்திலிருந்த மோதிரத்தின் வெண்மையைப் பார்ப்பதைப் போன்றுள்ளது. (இதன் அறிவிப்பவர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) (எனக்கு இதை அறிவித்த) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்களிடம், “அ(ந்த மோதிரத்)தில் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று பொறிக்கப்பட்டிருந்ததாக (தங்க ளிடம்) யார் கூறியது?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அனஸ் (ரலி) அவர்கள் தான்’ என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل ابو الحسن، اخبرنا عبد الله، قال اخبرنا شعبة، عن قتادة، عن انس بن مالك، قال كتب النبي صلى الله عليه وسلم كتابا او اراد ان يكتب فقيل له انهم لا يقرءون كتابا الا مختوما. فاتخذ خاتما من فضة نقشه محمد رسول الله. كاني انظر الى بياضه في يده. فقلت لقتادة من قال نقشه محمد رسول الله قال انس
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #65
- Book Index
- 7
Grades
- -
