ஹதீஸ்கள்
#59
ஸஹீஹ் அல்-புகாரீ - Knowledge
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து, “மறுமை நாள் எப்போது?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்குப் பதில ளிக்காமல்) தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர், “நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; ஆயினும், அவர் கேட்ட கேள்வியை நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை” என்று கூறினர். வேறுசிலர், “நபியவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுறவில்லை” என்றனர். நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துவிட்டு, “மறுமை நாளைப் பற்றி கேட்டவர் எங்கே?” என்று வினவினார்கள். உடனே அவர் “அல்லாஹ்வின் தூதரே! இதோ நான்தான்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “நம்பகத் தன்மை பாழ்படுத்தப் பட்டால் மறுமை நாளை நீர் எதிர்பார்க்கலாம்” என்று சொன்னார்கள். அவர், “அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “தகுதியற்றவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும்போது, நீர் மறுமை நாளை எதிர்பாரும்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن سنان، قال حدثنا فليح، ح وحدثني ابراهيم بن المنذر، قال حدثنا محمد بن فليح، قال حدثني ابي قال، حدثني هلال بن علي، عن عطاء بن يسار، عن ابي هريرة، قال بينما النبي صلى الله عليه وسلم في مجلس يحدث القوم جاءه اعرابي فقال متى الساعة فمضى رسول الله صلى الله عليه وسلم يحدث، فقال بعض القوم سمع ما قال، فكره ما قال، وقال بعضهم بل لم يسمع، حتى اذا قضى حديثه قال " اين اراه السايل عن الساعة ". قال ها انا يا رسول الله. قال " فاذا ضيعت الامانة فانتظر الساعة ". قال كيف اضاعتها قال " اذا وسد الامر الى غير اهله فانتظر الساعة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Knowledge
- Hadith Index
- #59
- Book Index
- 1
Grades
- -
