ஹதீஸ்கள்
#58
ஸஹீஹ் அல்-புகாரீ - Belief
ஸியாத் பின் இலாக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (முஆவியா (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்தில் கூஃபாவின் ஆளுநராக இருந்த) முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் இறந்த நாளில் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் (எழுந்து மேடையில்) நின்று இறைவனைப் போற் றிப் புகழ்ந்துவிட்டுக் கூறலானார்கள்: (அடுத்த) தலைவர் வரும்வரையில் இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சு வதையும் கண்ணியத்தையும் அமைதி யையும் கடைப்பிடியுங்கள். கூடிய விரை வில் உங்கள் (புதிய) தலைவர் வந்து விடுவார். பின்னர் தொடர்ந்து கூறினார்கள்: (இறந்து விட்ட) உங்கள் தலைவருக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், அவர் மன்னிப்பை விரும்பக்கூடியவராக இருந்தார். இறைவாழ்த்துக்குப்பின்! (விஷயம் என்னவென்றால்,) நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “இஸ்லாத்தைத் ஏற்று நடப்பதாகத் தங்களிடம் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வந்திருக்கிறேன்” என்றேன். அப்போது நபியவர்கள், “முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்” என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அதன்படி உறுதிமொழி அளித்தேன். (கூஃபா நகர மக்களே!) இந்த இறையில்லத்தின் அதிபதிமீது ஆணையாக! நான் உங்களுக்கு நலம் நாடுபவனாக இருக்கிறேன். பிறகு பாவமன்னிப்புக் கோரிவிட்டு (மேடையிலிருந்து) இறங்கினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Belief
- Hadith Index
- #58
- Book Index
- 51
Grades
- -