ஹதீஸ்கள்
#53
ஸஹீஹ் அல்-புகாரீ - Belief
அபூஜம்ரா (நஸ்ர் பின் இம்ரான் அள்ளுபஈ - ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பஸ்ராவின் ஆளுநராயிருந்த) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தேன். அவர்கள் என்னைத் தமது கட்டிலில் அமரவைத்திருந்தார்கள். அப்போது அவர்கள், “என்னிடம் நீங்கள் (பாரசீகத்தில் மொழிபெயர்ப்பவராக இங்கேயே) தங்கிவிடுங்கள். (அதற்காக) நான் எனது செல்வத்திலிருந்து ஒரு பங்கை உங்களுக்குத் தருகிறேன்” என்று கேட்டுக் கொண்டார்கள். அதன்படி அவர்களுடன் நான் இரண்டு மாதங்கள் தங்கினேன். பின்னர் அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக்குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது, ‘இம்மக்கள் யார்?’ அல்லது ‘இத்தூதுக் குழுவினர் யார்?’ என்று கேட்டார் கள். அதற்கு மக்கள், ‘ரபீஆ (குடும்பத்தார்)’ என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், “இழிவுக்குள்ளாகாமலும் மனவருத்திற்குள்ளாகாமலும் (தாமாக முன்வந்து இஸ்லாத்தை ஏற்ற நிலையில்) வருகை புரிந்துள்ள ‘சமுதாயமே’ அல்லது ‘தூதுக் குழாமே’ வருக!” என்று வரவேற்றார்கள். அத்தூதுக் குழுவினர், “அல்லாஹ்வின் தூதரே! (போர் புரியக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுள்ள) புனித மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் எங்களால் தங்களிடம் வர முடியவில்லை. (காரணம்) எங்களுக் கும் உங்களுக்கும் இடையே (எதிரிகளான) ‘முளர்’ குலத்து இறைமறுப்பாளர்களின் இந்தக் குடும்பத்தார் (தடையாக) உள்ளனர். ஆகவே, தெளிவான ஆணையொன் றைப் பிறப்பியுங்கள். அதை நாங்கள் எங்களுக்குப் பின்னால் உள்ளவர்களுக் கும் தெரிவிப்போம். அ(தைச் செயல் படுத்துவ)தன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம்” என்றார்கள். அதையொட்டி அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சில வகை குடிபானங் களைப் பற்றியும் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு நான்கு விஷயங்களைக் கட்டளையிட்டார்கள்; நான்கு விஷயங்களை அவர்களுக்குத் தடை செய்தார்கள். 1. அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, “அல்லாஹ் ஒருவனையே நம்புதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுவது. 2. தொழுகையைக் கடைப்பிடிப்பது; 3. ஸகாத் வழங்குவது; 4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. (இவையன்றி) போரில் கிடைக்கும் பொருட்களி லிருந்து ஐந்தில் ஒரு பாகத்தை நீங்கள் வழங்க வேண்டும். (மது ஊற்றிவைக்கப் பயன்படும்) மண்சாடி, சுரைக்காய் குடுவை, மரப் பீப்பாய், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகிய நான்கையும் பயன்படுத்த வேண்டாமென அவர்களுக்குத் தடை செய்தார்கள். மேலும், “இவற்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பின்னால் இருப்போருக்குத் தெரிவித்துவிடுங்கள்” என்றும் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن الجعد، قال اخبرنا شعبة، عن ابي جمرة، قال كنت اقعد مع ابن عباس، يجلسني على سريره فقال اقم عندي حتى اجعل لك سهما من مالي، فاقمت معه شهرين، ثم قال ان وفد عبد القيس لما اتوا النبي صلى الله عليه وسلم قال " من القوم او من الوفد ". قالوا ربيعة. قال " مرحبا بالقوم او بالوفد غير خزايا ولا ندامى ". فقالوا يا رسول الله، انا لا نستطيع ان ناتيك الا في شهر الحرام، وبيننا وبينك هذا الحى من كفار مضر، فمرنا بامر فصل، نخبر به من وراءنا، وندخل به الجنة. وسالوه عن الاشربة. فامرهم باربع، ونهاهم عن اربع، امرهم بالايمان بالله وحده. قال " اتدرون ما الايمان بالله وحده ". قالوا الله ورسوله اعلم. قال " شهادة ان لا اله الا الله وان محمدا رسول الله، واقام الصلاة، وايتاء الزكاة، وصيام رمضان، وان تعطوا من المغنم الخمس ". ونهاهم عن اربع عن الحنتم والدباء والنقير والمزفت. وربما قال المقير. وقال " احفظوهن واخبروا بهن من وراءكم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Belief
- Hadith Index
- #53
- Book Index
- 46
Grades
- -
