ஹதீஸ்கள்
#50
ஸஹீஹ் அல்-புகாரீ - Belief
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்கள்முன் (வெளிப்படையாக) வந்தி ருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “ஈமான் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஈமான் என்பது, அல்லாஹ்வை யும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனது சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவதும், (மறுமையில்) உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நீர் நம்புவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். அடுத்து அவர், “இஸ்லாம் என்றால் என்ன?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீர் வழிபடுவதும், அவனுக்கு (எதனையும் எவரையும்) இணையாக்காமலிருப்பதும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், கடமையாக்கப்பட்ட ஸகாத்தை வழங்கி வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்” என்றார்கள். அடுத்து “இஹ்ஸான் என்றால் என்ன?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வழிபடுவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் (என்ற உணர்வுடன் வழிபடுவதாகும்)” என்றார்கள்.39 அடுத்து அவர் “மறுமை (நாள்) எப்போது?” என்று கேட்க, அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இதைப் பற்றிக் கேள்வி கேட்கப்பட்டவர் (அதாவது நான்), கேள்வி கேட்பவரைவிட (அதாவது உம்மைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். (ஆயினும்,) மறுமையின் அடையாளங்கள் சிலவற்றை உமக்கு அறிவிக்கிறேன். (அவை:) ஓர் அடிமைப் பெண் தன் உரிமையாளனைப் பெற்றெடுத்தல்;40 கறுப்பு நிற (மட்டமான) ஒட்டகங்களை மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவு) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும்” என்று கூறிவிட்டு, “உலக முடிவு பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது...” (31:34) எனும் இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரை (என்னிடம்) திரும்ப அழைத்து வாருங்கள்” என்றார்கள். (அவரைத் தேடிச் சென்றவர்கள்) அவரை எங்கும் காணவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இ(ப்போது வந்துபோன)வர்தான் (வானவர்) ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களது மார்க்கத்தை (தீன்) கற்றுத்தர வந்திருந்தார்” என்றார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்: ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு தாம் அளித்த பதில்கள் அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கையின் (‘தீன்’) அம்சங்களாகவே கருதினார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا اسماعيل بن ابراهيم، اخبرنا ابو حيان التيمي، عن ابي زرعة، عن ابي هريرة، قال كان النبي صلى الله عليه وسلم بارزا يوما للناس، فاتاه جبريل فقال ما الايمان قال " الايمان ان تومن بالله وملايكته وبلقايه ورسله، وتومن بالبعث ". قال ما الاسلام قال " الاسلام ان تعبد الله ولا تشرك به، وتقيم الصلاة، وتودي الزكاة المفروضة، وتصوم رمضان ". قال ما الاحسان قال " ان تعبد الله كانك تراه، فان لم تكن تراه فانه يراك ". قال متى الساعة قال " ما المسيول عنها باعلم من السايل، وساخبرك عن اشراطها اذا ولدت الامة ربها، واذا تطاول رعاة الابل البهم في البنيان، في خمس لا يعلمهن الا الله ". ثم تلا النبي صلى الله عليه وسلم {ان الله عنده علم الساعة} الاية. ثم ادبر فقال " ردوه ". فلم يروا شييا. فقال " هذا جبريل جاء يعلم الناس دينهم ". قال ابو عبد الله جعل ذلك كله من الايمان
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Belief
- Hadith Index
- #50
- Book Index
- 43
Grades
- -
