ஹதீஸ்கள்
#30
ஸஹீஹ் அல்-புகாரீ - Belief
மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவுக்கு அருகிலுள்ள) ‘ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர்மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதைப் போன்றே) அவருடைய அடிமைமீது ஒரு ஜோடி ஆடையும் இருப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் உரிமையாளரும் ஒரே விதமான உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அபூதர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக்கொண்டிருக்கையில் அவருடைய தாயைக் கொண்டு அவரை இழிவு படுத்திப் பேசிவிட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், “அபூதர்! அவருடைய தாயைக் குறிப்பிட்டு இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே இருக்கின்றீர். உங்களின் அடிமைகள் உங்களின் சகோதரர்கள் ஆவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின்கீழ் வைத்துள்ளான். எனவே, தம் சகோதரரைத் தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உணவளிக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு கொடுத்தால், அவர்களுக்கு நீங்கள் ஒத்துழையுங்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، قال حدثنا شعبة، عن واصل الاحدب، عن المعرور، قال لقيت ابا ذر بالربذة، وعليه حلة، وعلى غلامه حلة، فسالته عن ذلك، فقال اني ساببت رجلا، فعيرته بامه، فقال لي النبي صلى الله عليه وسلم " يا ابا ذر اعيرته بامه انك امرو فيك جاهلية، اخوانكم خولكم، جعلهم الله تحت ايديكم، فمن كان اخوه تحت يده فليطعمه مما ياكل، وليلبسه مما يلبس، ولا تكلفوهم ما يغلبهم، فان كلفتموهم فاعينوهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Belief
- Hadith Index
- #30
- Book Index
- 23
Grades
- -
