ஹதீஸ்கள்
#4
ஸஹீஹ் அல்-புகாரீ - Revelation
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமக்கு வேத அறிவிப்பு (வஹீ) நின்றுபோயிருந்த இடைக்காலம் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறனார்கள்: நான் நடந்துபோய்க்கொண்டிருக்கும் போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு அண்ணாந்து பார்த்தேன். அங்கே, ‘ஹிரா’வில் என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்கு மிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந் தார். அவரைக் கண்டு நான் அச்சமடைந் தேன். உடனே நான் (வீட்டுக்குத்) திரும்பி (என் வீட்டாரிடம்) “எனக்குப் போர்த்தி விடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்று சொன்னேன். (அவர்களும் போர்த்தி விட்டார்கள்.) அப்போது அல்லாஹ், “போர்த்தி யிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக. உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக. உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப் பீராக. அசுத்தத்திலிருந்து விலகியிருப் பீராக” எனும் வசனங்களை (74:1-5) அருளினான். பின்னர் வேத அறிவிப்பு (வஹீ) தொடர்ந்து அதிகமாக வரலாயிற்று. இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் யூனுஸ், மஅமர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் (முந்தைய ஹதீஸில் இடம்பெற்றுள்ள ‘இதயம் படபடக்க’ என்பதற்குப் பதிலாக) ‘கழுத்துச் சதைகள் படபடக்க’ என வந்துள்ளது. அத்தியாயம் :
قال ابن شهاب واخبرني ابو سلمة بن عبد الرحمن، ان جابر بن عبد الله الانصاري، قال وهو يحدث عن فترة الوحى، فقال في حديثه " بينا انا امشي، اذ سمعت صوتا، من السماء، فرفعت بصري فاذا الملك الذي جاءني بحراء جالس على كرسي بين السماء والارض، فرعبت منه، فرجعت فقلت زملوني. فانزل الله تعالى {يا ايها المدثر * قم فانذر} الى قوله {والرجز فاهجر} فحمي الوحى وتتابع ". تابعه عبد الله بن يوسف وابو صالح. وتابعه هلال بن رداد عن الزهري. وقال يونس ومعمر " بوادره
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Revelation
- Hadith Index
- #4
- Book Index
- 4
Grades
- -
