ஹதீஸ்கள்
#2
ஸஹீஹ் அல்-புகாரீ - Revelation
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தங்க ளுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எப்படி வருகின்றது?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சில வேளைகளில் மணி ஓசையைப் போன்று எனக்கு வேத அறிவிப்பு (வஹீ) வரும். இவ்வாறு வருவது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும். மணி ஓசை மூலம் அவர் (வானவர்) கூறியதை நான் மனனமிட்டுக்கொண்ட நிலையில் அது என்னைவிட்டு விலகிவிடும். இன்னும் சில வேளைகளில், வானவர் ஒரு மனிதரைப் போன்று எனக்குக் காட்சியளித்து என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக்கொள்வேன்” என்று பதிலளித்தார்கள். மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, கடுமையான குளிர்வீசும் நாளில் வேதஅறிவிப்பு (வஹீ) வருவதை நான் பார்த்துள்ளேன். வேதஅறிவிப்பு நின்ற பின் அவர்களது நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்.5 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة ام المومنين رضى الله عنها ان الحارث بن هشام رضى الله عنه سال رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف ياتيك الوحى فقال رسول الله صلى الله عليه وسلم " احيانا ياتيني مثل صلصلة الجرس وهو اشده على فيفصم عني وقد وعيت عنه ما قال، واحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فاعي ما يقول ". قالت عايشة رضى الله عنها ولقد رايته ينزل عليه الوحى في اليوم الشديد البرد، فيفصم عنه وان جبينه ليتفصد عرقا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Revelation
- Hadith Index
- #2
- Book Index
- 2
Grades
- -
