Loading...

Loading...
நூல்கள்
௨௭ ஹதீஸ்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் என் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருப்பதைக் கண்டால், நான்கு சாட்சிகளைக் கொண்டு வரும்வரை நான் அவனைத் தொடக்கூடாதா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்" என்றார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், "இல்லை; தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நானாக இருந்தால்,அதற்கு முன்பே வாளால் அவனை வெட்டிவிடுவேன்" என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் தலைவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்! அவர் ரோஷக்காரர். ஆனால், நான் அவரை விட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னைவிட ரோஷக்காரன்" என்றார்கள். அத்தியாயம் :
حدثنا ابو بكر بن ابي شيبة، حدثنا خالد بن مخلد، عن سليمان بن بلال، حدثني سهيل، عن ابيه، عن ابي هريرة، قال قال سعد بن عبادة يا رسول الله لو وجدت مع اهلي رجلا لم امسه حتى اتي باربعة شهداء قال رسول الله صلى الله عليه وسلم " نعم " . قال كلا والذي بعثك بالحق ان كنت لاعاجله بالسيف قبل ذلك . قال رسول الله صلى الله عليه وسلم " اسمعوا الى ما يقول سيدكم انه لغيور وانا اغير منه والله اغير مني
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "என் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்க நான் கண்டால், வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்" என்று சொல்ல, இந்தச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், "சஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியக்கின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரைவிட அதிக ரோஷமுள்ளவன்; அல்லாஹ் என்னைவிடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ்வின் ரோஷம் காரணமாகவே அவன் வெளிப்படையான மற்றும் மறைவான எல்லா மானக் கேடான செயல்களையும் தடை செய்துள்ளான். அல்லாஹ்வைவிட ரோஷக்காரர் வேறெவருமில்லை; (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புகின்றவர் அல்லாஹ்வைவிட வேறெவரும் இல்லை. ஆகவேதான், (தன்) தூதர்களை நற்செய்தி கூறுபவர்களாகவும் எச்சரிக்கை செய்பவர்களாகவும் (இவ்விரு அம்சங்களுடன்) அல்லாஹ் அனுப்பிவைத்தான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர். அதனால்தான், அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني عبيد الله بن عمر القواريري، وابو كامل فضيل بن حسين الجحدري - واللفظ لابي كامل - قالا حدثنا ابو عوانة، عن عبد الملك بن عمير، عن وراد، - كاتب المغيرة - عن المغيرة بن شعبة، قال قال سعد بن عبادة لو رايت رجلا مع امراتي لضربته بالسيف غير مصفح عنه . فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم فقال " اتعجبون من غيرة سعد فوالله لانا اغير منه والله اغير مني من اجل غيرة الله حرم الفواحش ما ظهر منها وما بطن ولا شخص اغير من الله ولا شخص احب اليه العذر من الله من اجل ذلك بعث الله المرسلين مبشرين ومنذرين ولا شخص احب اليه المدحة من الله من اجل ذلك وعد الله الجنة
وحدثناه ابو بكر بن ابي شيبة، حدثنا حسين بن علي، عن زايدة، عن عبد الملك، بن عمير بهذا الاسناد مثله . وقال غير مصفح . ولم يقل عنه
وحدثناه ابو بكر بن ابي شيبة، حدثنا حسين بن علي، عن زايدة، عن عبد الملك، بن عمير بهذا الاسناد مثله . وقال غير مصفح . ولم يقل عنه
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ ஃபஸாரா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "(வெள்ளை நிறத்தவனான எனக்கு) என் மனைவி கறுப்பான குழந்தையைப் பிரசவித்துள்ளாள் (அது என் குழந்தையா என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது)" என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம்" என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "அவற்றின் நிறம் என்ன?" என்று கேட்டார்கள். அவர், "சிவப்பு" என்றார். "அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர், "(ஆம்) அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்கள் இருக்கவே செய்கின்றன" என்று பதிலளித்தார். "(தாயிடம் இல்லாத) அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு மட்டும் எப்படி வந்தது?" என்று நபியவர்கள் கேட்க, அவர் "அந்த ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம்" என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "(உன்னுடைய) இந்தக் குழந்தையும் அதன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக்கூடும்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
وحدثناه قتيبة بن سعيد، وابو بكر بن ابي شيبة وعمرو الناقد وزهير بن حرب - واللفظ لقتيبة - قالوا حدثنا سفيان بن عيينة، عن الزهري، عن سعيد بن المسيب، عن ابي هريرة، قال جاء رجل من بني فزارة الى النبي صلى الله عليه وسلم فقال ان امراتي ولدت غلاما اسود . فقال النبي صلى الله عليه وسلم " هل لك من ابل " . قال نعم . قال " فما الوانها " . قال حمر . قال " هل فيها من اورق " . قال ان فيها لورقا . قال " فانى اتاها ذلك " . قال عسى ان يكون نزعه عرق . قال " وهذا عسى ان يكون نزعه عرق
மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர் "அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி கறுப்பான மகனைப் பிரசவித்துள்ளாள்” என்று, அது தனது குழந்தை அல்ல என்பதைப் போன்று சாடையாகக் கேட்டார்" என்று இடம்பெற்றுள்ளது. ஹதீஸின் இறுதியில் "அவன் தம்முடையவன் அல்லன் என்று மறுக்க அவரை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்க வில்லை" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
وحدثنا اسحاق بن ابراهيم، ومحمد بن رافع، وعبد بن حميد، قال ابن رافع حدثنا وقال الاخران، اخبرنا عبد الرزاق، اخبرنا معمر، ح وحدثنا ابن رافع، حدثنا ابن، ابي فديك اخبرنا ابن ابي ذيب، جميعا عن الزهري، بهذا الاسناد . نحو حديث ابن عيينة . غير ان في، حديث معمر فقال يا رسول الله ولدت امراتي غلاما اسود وهو حينيذ يعرض بان ينفيه . وزاد في اخر الحديث ولم يرخص له في الانتفاء منه
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, "(வெள்ளை நிறத்தவனான எனக்கு) என் மனைவி கறுப்பான மகனைப் பெற்றெடுத்துள்ளாள்; அவனை நான் (என் மகன் என ஏற்க மனத்தளவில்) மறுத்துவிட்டேன்" என்று சொன்னார். அதற்கு அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?" என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி "ஆம்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள் "அவற்றின் நிறம் என்ன?" என்று கேட்டார்கள். அவர் "சிவப்பு” என்று சொன்னார். "அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அவர் "ஆம்" என்று பதிலளித்தார். "(தாயிடம் இல்லாத) அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு எப்படி வந்தது?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, "அந்த ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம், அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(உன்னுடைய) இந்த மகனும் அவன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக்கூடும்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
وحدثني ابو الطاهر، وحرملة بن يحيى، - واللفظ لحرملة - قالا اخبرنا ابن، وهب اخبرني يونس، عن ابن شهاب، عن ابي سلمة بن عبد الرحمن، عن ابي هريرة، انصلى الله عليه وسلم فقال يا رسول الله ان امراتي ولدت غلاما اسود واني انكرته . فقال له النبي صلى الله عليه وسلم " هل لك من ابل " . قال نعم . قال " ما الوانها " . قال حمر . قال " فهل فيها من اورق " . قال نعم . قال رسول الله صلى الله عليه وسلم " فانى هو " . قال لعله يا رسول الله يكون نزعه عرق له . فقال له النبي صلى الله عليه وسلم " وهذا لعله يكون نزعه عرق له
وحدثني محمد بن رافع، حدثنا حجين، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، انه قال بلغنا ان ابا هريرة، كان يحدث عن رسول الله صلى الله عليه وسلم بنحو حديثهم
وحدثني محمد بن رافع، حدثنا حجين، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، انه قال بلغنا ان ابا هريرة، كان يحدث عن رسول الله صلى الله عليه وسلم بنحو حديثهم