Loading...

Loading...
நூல்கள்
௬௬ ஹதீஸ்கள்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த இறை அறிவிப்பானது தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவானதாகவே) இருந்தது. பிறகு அவர்கள் ஹிரா (மலைக்) குகைக்குச் சென்று அங்கே பல நாட்கள் (தனிமையில் தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபடலானார்கள். அந்த நாட்களுக்கான உணவைத் தம்முடன் எடுத்துச் செல்வார்கள். பிறகு (அந்த உணவு தீர்ந்ததும் தம் துணைவியாரான) கதீஜாவிடம் திரும்பி வருவார்கள். அதைப் போன்றே பல நாட்களுக்குரிய உணவை கதீஜா அவர்கள் தயார் செய்து கொடுப்பார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்குச் சத்திய (வேத)ம் திடீரென்று (ஒருநாள்) வரும்வரை நீடித்தது. (அன்று) வானவர் (ஜிப்ரீல்) அவர்கள் அந்தக் குகைக்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம், ‘ஓதுவீராக’ என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் ஓதத் தெரிந்தவனில்லையே” என்று அவருக்குப் பதிலளித்தார்கள். அப்போது நடந்த சம்பவத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்கினார்கள்: அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு “ஓதுவீராக” என்று சொன்னார். அப்போதும் “நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே” என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னை விட்டுவிட்டு, “ஓதுவீராக” என்றார். அப்போதும், “நான் ஓதத் தெரிந்தவனில்லையே” என்றேன். அவர் என்னை மூன்றாவது முறையும் என்னால் தாங்க இயலாத அளவிற்கு இறுகக் கட்டி அணைத்து பின்னர் என்னை விட்டுவிட்டு “படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக...” என்று தொடங்கும் (96ஆவது அத்தியாயத்தின்) வசனங்களை “மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்” என்பதுவரை (96:1-5) ஓதினார். (தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) பிறகு கழுத்தின் தசைகள் (அச்சத்தால்) படபடக்க அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பி வந்து, “எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்று நபியவர்கள் சொன்னார்கள். அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. அப்போது, “கதீஜா! எனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டுவிட்டு, நடந்தவற்றை கதீஜா அவர்களிடம் தெரிவித்தபடி தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்று தாம் அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள், “அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் (அதை) நற்செய்தியாகக் கருதுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி செய்கிறீர்கள்” என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு தம் தந்தையின் சகோதரரான நவ்ஃபல் என்பாரின் புதல்வர் ‘வரக்கா’விடம் கதீஜா சென்றார்கள். நவ்ஃபல், அசத் என்பவரின் புதல்வரும் அசத், அப்துல் உஸ்ஸாவின் புதல்வரும் அப்துல் உஸ்ஸா, குஸை என்பவரின் புதல்வரும் ஆவர். ‘வரக்கா’ அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் அரபி மொழியில் எழுதத் தெரிந்தவராகவும் இன்ஜீல் வேதத்தை (ஹீப்ரு மொழியிலிருந்து) அரபி மொழியில் அல்லாஹ் நாடிய அளவுக்கு எழுதுபவராகவும் கண்பார்வை இழந்த முதியவராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா அவர்கள், “என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள்” என்று சொன்னார்கள். அப்போது வரக்கா நபி (ஸல்) அவர்களிடம் “என் சகோதரர் புதல்வரே! நீர் என்ன கண்டீர்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றை அவரிடம் தெரிவித்தார்கள். (அதைக் கேட்ட) வரக்கா நபி (ஸல்) அவர்களிடம், “(நீர் கண்ட) இவர்தான் (இறைத்தூதர்) மூசாவிடம் (இறைவனால்) அனுப்பப்பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார்” என்று கூறிவிட்டு, “உம்முடைய சமூகத்தார் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிரு டன் திடகாத்திரமான இளைஞனாக இருந்தால் நன்றாயிருக்குமே!” என்றார். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்கள் என்னை வெளியேற்றவா செய்வார்கள்?” என்று (வியப்புடன்) கேட்டார்கள். அதற்கு வரக்கா அவர்கள், “ஆம். நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற எவரும் மக்களால் பகைத்துக்கொள்ளப்படாமல் இருந்த தில்லை. உமது (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவி புரிவேன்” என்று பதிலளித்தார். அதன் பின்னர் வரக்கா நீண்ட நாள் வாழாமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேதஅறிவிப்போடு) சிறிது காலம் வேதஅறிவிப்பு தடைபட்டது. அதனால் நபி (ஸல்) அவர்கள் கவலையடைந்தார்கள். நமக்குக் கிடைத்த தகவலின்படி எந்த அளவுக்கு அவர்கள் மனம் உடைந்துபோனார்கள் என்றால், மலைச் சிகரங்களிலிருந்து கீழே விழ பலமுறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே விழுந்துவிடலாமென்று ஏதாவது மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அவர்களுக்கு முன்னால் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி, “முஹம்மதே! நீங்கள் உண்மையாகவே, அல்லாஹ்வின் தூதர்தான்” என்று கூறுவார்கள். இதைக் கேட்கும்போது நபி (ஸல்) அவர்களின் மனப்பதற்றம் அடங்கிவிடும். அவர்களது உள்ளம் அமைதியாகிவிடும். உடனே (மலை உச்சியிலிருந்து) திரும்பி வந்துவிடுவார்கள். வேதஅறிவிப்பு தடைபடுவது தொடர்ந்து நீண்டுசெல்லும்போது மறுபடியும் அவ்வாறே சிகரங்களை நோக்கிச் செல்வார்கள். அப்போதும் அவர்கள் முன்னிலையில் (வானவர்) ஜிப்ரீல் தோன்றி முன்போலவே கூறுவார்கள்.2 (இந்த ஹதீஸின் ஆரம்பத்தில் இடம் பெற்றுள்ள ‘ஃபலகுஸ் ஸுப்ஹ்’ -அதி காலைப் பொழுதின் விடியல்- என்ப தைப் போன்றே குர்ஆனில் 6:96ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ள) ‘ஃபாலிகுல் இஸ்பாஹ்’ (என்பதிலுள்ள ‘இஸ் பாஹ்’) எனும் சொல்லுக்கு ‘பகலில் சூரிய வெளிச்சம்; இரவில் நிலா வெளிச் சம்’ என்பது பொருளாகும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب،. وحدثني عبد الله بن محمد، حدثنا عبد الرزاق، حدثنا معمر، قال الزهري فاخبرني عروة، عن عايشة رضى الله عنها انها قالت اول ما بدي به رسول الله صلى الله عليه وسلم من الوحى الرويا الصادقة في النوم، فكان لا يرى رويا الا جاءت مثل فلق الصبح، فكان ياتي حراء فيتحنث فيه وهو التعبد الليالي ذوات العدد، ويتزود لذلك ثم يرجع الى خديجة فتزوده لمثلها، حتى فجيه الحق وهو في غار حراء فجاءه الملك فيه فقال اقرا. فقال له النبي صلى الله عليه وسلم " فقلت ما انا بقاري فاخذني فغطني حتى بلغ مني الجهد ثم ارسلني. فقال اقرا. فقلت ما انا بقاري. فاخذني فغطني الثانية حتى بلغ مني الجهد، ثم ارسلني فقال اقرا. فقلت ما انا بقاري. فغطني الثالثة حتى بلغ مني الجهد، ثم ارسلني فقال اقرا باسم ربك الذي خلق ". حتى بلغ {ما لم يعلم} فرجع بها ترجف بوادره حتى دخل على خديجة فقال " زملوني زملوني ". فزملوه حتى ذهب عنه الروع فقال " يا خديجة ما لي ". واخبرها الخبر وقال " قد خشيت على نفسي ". فقالت له كلا ابشر، فوالله لا يخزيك الله ابدا، انك لتصل الرحم، وتصدق الحديث، وتحمل الكل، وتقري الضيف، وتعين على نوايب الحق. ثم انطلقت به خديجة حتى اتت به ورقة بن نوفل بن اسد بن عبد العزى بن قصى وهو ابن عم خديجة اخو ابيها، وكان امرا تنصر في الجاهلية، وكان يكتب الكتاب العربي فيكتب بالعربية من الانجيل ما شاء الله ان يكتب، وكان شيخا كبيرا قد عمي فقالت له خديجة اى ابن عم اسمع من ابن اخيك. فقال ورقة ابن اخي ماذا ترى فاخبره النبي صلى الله عليه وسلم ما راى فقال ورقة هذا الناموس الذي انزل على موسى، يا ليتني فيها جذعا اكون حيا، حين يخرجك قومك. فقال رسول الله صلى الله عليه وسلم " اومخرجي هم ". فقال ورقة نعم، لم يات رجل قط بما جيت به الا عودي، وان يدركني يومك انصرك نصرا موزرا. ثم لم ينشب ورقة ان توفي، وفتر الوحى فترة حتى حزن النبي صلى الله عليه وسلم فيما بلغنا حزنا غدا منه مرارا كى يتردى من رءوس شواهق الجبال، فكلما اوفى بذروة جبل لكى يلقي منه نفسه، تبدى له جبريل فقال يا محمد انك رسول الله حقا. فيسكن لذلك جاشه وتقر نفسه فيرجع، فاذا طالت عليه فترة الوحى غدا لمثل ذلك، فاذا اوفى بذروة جبل تبدى له جبريل فقال له مثل ذلك. قال ابن عباس {فالق الاصباح} ضوء الشمس بالنهار، وضوء القمر بالليل
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.3 இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، عن انس بن مالك، ان رسول الله صلى الله عليه وسلم قال " الرويا الحسنة من الرجل الصالح جزء من ستة واربعين جزءا من النبوة
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிட மிருந்து வருவதாகும். இதை அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.4 அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا زهير، حدثنا يحيى هو ابن سعيد قال سمعت ابا سلمة، قال سمعت ابا قتادة، عن النبي صلى الله عليه وسلم قال " الرويا من الله، والحلم من الشيطان
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விருப்ப மான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திவிட முடியாது. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، حدثني ابن الهاد، عن عبد الله بن خباب، عن ابي سعيد الخدري، انه سمع النبي صلى الله عليه وسلم يقول " اذا راى احدكم رويا يحبها فانما هي من الله، فليحمد الله عليها، وليحدث بها، واذا راى غير ذلك مما يكره، فانما هي من الشيطان، فليستعذ من شرها، ولا يذكرها لاحد، فانها لا تضره
(நபி ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (பொய்க்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, ஒருவர் கெட்ட கனவு கண்டால் அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். தமது இடப்பக்கத்தில் துப்பட்டும். ஏனெனில், அப்போது அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது. இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا عبد الله بن يحيى بن ابي كثير واثنى عليه خيرا لقيته باليمامة عن ابيه، حدثنا ابو سلمة، عن ابي قتادة، عن النبي صلى الله عليه وسلم قال " الرويا الصالحة من الله، والحلم من الشيطان، فاذا حلم فليتعوذ منه وليبصق عن شماله، فانها لا تضره ". وعن ابيه حدثنا عبد الله بن ابي قتادة عن ابيه عن النبي صلى الله عليه وسلم مثله
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.5 இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن قتادة، عن انس بن مالك، عن عبادة بن الصامت، عن النبي صلى الله عليه وسلم قال " رويا المومن جزء من ستة واربعين جزءا من النبوة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதே ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் அனஸ் (ரலி) அவர்களிட மிருந்தும் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى بن قزعة، حدثنا ابراهيم بن سعد، عن الزهري، عن سعيد بن المسيب، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " رويا المومن جزء من ستة واربعين جزءا من النبوة ". رواه ثابت وحميد واسحاق بن عبد الله وشعيب عن انس عن النبي صلى الله عليه وسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல (உண்மையான) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني ابراهيم بن حمزة، حدثني ابن ابي حازم، والدراوردي، عن يزيد، عن عبد الله بن خباب، عن ابي سعيد الخدري، انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " الرويا الصالحة جزء من ستة واربعين جزءا من النبوة
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நற்செய்தி கூறுபவை (‘முபஷ்ஷிராத்’) தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை” என்று கூற நான் கேட்டேன். அப்போது மக்கள் “நற்செய்தி கூறுபவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், “நல்ல (உண்மையான) கனவு” என்று விடையளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، حدثني سعيد بن المسيب، ان ابا هريرة، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لم يبق من النبوة الا المبشرات ". قالوا وما المبشرات قال " الرويا الصالحة
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபித்தோழர்களில்) சிலருக்கு ‘லைலத்துல் கத்ர்’ (எனும் மகத்துவமிக்க) இரவு (ரமளான் மாதத்தில்) கடைசி ஏழுநாட்களில் இருப்பதாகக் கனவில் காட்டப்பட்டது. இன்னும் சிலருக்கு அது (ரமளானின்) கடைசிப் பத்து நாட்களில் இருப்பதாகக் கனவில் காட்டப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அதைக் கடைசி ஏழு நாட்களில் தேடிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.6 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، عن سالم بن عبد الله، عن ابن عمر رضى الله عنه ان اناسا، اروا ليلة القدر في السبع الاواخر، وان اناسا اروا انها في العشر الاواخر، فقال النبي صلى الله عليه وسلم " التمسوها في السبع الاواخر
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்கள் (சிறையில்) கழித்த காலம் அளவுக்கு நான் சிறையில் காலம் கழித்திருந்து, பிறகு (அவரிடம் வந்ததைப் போன்றே) என்னை (விடுதலை செய்ய) அழைப்பவர் என்னிடம் வந்திருந்தால் நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله، حدثنا جويرية، عن مالك، عن الزهري، ان سعيد بن المسيب، وابا، عبيد اخبراه عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " لو لبثت في السجن ما لبث يوسف، ثم اتاني الداعي لاجبته
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கனவில் என்னை யார் காண்கிறாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.8 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: “நபி (ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க அடை யாளங்களுடன்) அவர்களைக் கண்டால் தான் (நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கருதப்படும்)” என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.9 அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرنا عبد الله، عن يونس، عن الزهري، حدثني ابو سلمة، ان ابا هريرة، قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " من راني في المنام فسيراني في اليقظة، ولا يتمثل الشيطان بي ". قال ابو عبد الله قال ابن سيرين اذا راه في صورته
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.10 மேலும், இறை நம்பிக்கையாளர் காணும் (உண்மையான) நல்ல கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا معلى بن اسد، حدثنا عبد العزيز بن مختار، حدثنا ثابت البناني، عن انس رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " من راني في المنام فقد راني، فان الشيطان لا يتخيل بي، ورويا المومن جزء من ستة واربعين جزءا من النبوة
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ் விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஆகவே, எவரேனும் தாம் விரும்பாத (தீய கனவு) ஒன்றைக் கண்டால் அவர் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்; ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அவருக்கு அது எந்தத் தீங்கும் இழைத்திட இயலாது. மேலும், ஷைத்தான் என் உருவத்தில் காட்சி தரமாட்டான். இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.11 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عبيد الله بن ابي جعفر، اخبرني ابو سلمة، عن ابي قتادة، قال قال النبي صلى الله عليه وسلم " الرويا الصالحة من الله، والحلم من الشيطان، فمن راى شييا يكرهه فلينفث عن شماله ثلاثا، وليتعوذ من الشيطان، فانها لا تضره، وان الشيطان لا يتراءى بي
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் உண்மையையே கண்டார். இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا خالد بن خلي، حدثنا محمد بن حرب، حدثني الزبيدي، عن الزهري، قال ابو سلمة قال ابو قتادة رضى الله عنه قال النبي صلى الله عليه وسلم " من راني فقد راى الحق ". تابعه يونس وابن اخي الزهري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கனவில்) யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் உண்மையையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் (காட்சியளிப்பவனாக) இருக்கமாட்டான். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، حدثني ابن الهاد، عن عبد الله بن خباب، عن ابي سعيد الخدري، سمع النبي صلى الله عليه وسلم يقول "من راني فقد راى الحق، فان الشيطان لا يتكونني
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு (ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட) சொற்களின் திறவுகோல்கள் வழங்கப்பட்டுள்ளன. (எதிரிகளுக்கு என்னைப் பற்றி மதிப்பும்) அச்ச(மு)ம்ஏற்படுத்தப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு நான் உறங்கிக்கொண்டிருக்கையில் (கனவில்) பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் கொண்டுவரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றுவிட்டார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை ஓரிடத்திóருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுசென்று (அனுபவித்துக்)கொண்டிருக்கிறீர்கள்” என்று சொன்னார்கள்.14 அத்தியாயம் :
حدثنا احمد بن المقدام العجلي، حدثنا محمد بن عبد الرحمن الطفاوي، حدثنا ايوب، عن محمد، عن ابي هريرة، قال قال النبي صلى الله عليه وسلم " اعطيت مفاتيح الكلم، ونصرت بالرعب، وبينما انا نايم البارحة اذ اتيت بمفاتيح خزاين الارض حتى وضعت في يدي ". قال ابو هريرة فذهب رسول الله صلى الله عليه وسلم وانتم تنتقلونها
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (இறையில்லம்) கஅபா வின் அருகே எனக்கு(க் கனவில்) என்னைக் காட்டப்பட்டது. அப்போது மனிதர்களில் மாநிறத்தில் நீ பார்த்ததிலேயே மிக அழகான மாநிறமுடைய மனிதர் ஒருவரைக் கண்டேன். தோள்வரை நீண்டுள்ள முடிகளில் நீ பார்த்த வற்றிலேயே மிக அழகான தலைமுடி அவருக்கு இருந்தது; அந்த முடியை அவர் (படிய) வாரிவிட்டிருந்தார்; அதிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது. ‘இரு மனிதர்கள்மீது’ அல்லது ‘இரு மனிதர்களின் தோள்கள்மீது’ சாய்ந்தபடி அவர் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தார். அப்போது நான், “இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு, “(இவர்தான்) மர்யமின் குமாரர் மஸீஹ் (ஈசா)” என்று பதிலளிக்கப்பட்டது. பிறகு நான் நிறைய சுருள்முடி கொண்ட வலக்கண் குருடான ஒரு மனிதனையும் பார்த்தேன். அவனது கண் ஒரே குலையில் துருத்திக்கொண்டிருக்கும் திராட்சை யைப் போன்றிருந்தது. அப்போது நான், “யார் இவர்?” என்று கேட்டேன். அதற்கு “இவன்தான் தஜ்ஜால் எனும் மஸீஹ்” என்று பதிலளிக்கப்பட்டது. இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15 அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن نافع، عن عبد الله بن عمر رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال " اراني الليلة عند الكعبة فرايت رجلا ادم كاحسن ما انت راء من ادم الرجال، له لمة كاحسن ما انت راء من اللمم، قد رجلها تقطر ماء، متكيا على رجلين او على عواتق رجلين يطوف بالبيت، فسالت من هذا فقيل المسيح ابن مريم. ثم اذا انا برجل جعد قطط اعور العين اليمنى كانها عنبة طافية، فسالت من هذا فقيل المسيح الدجال
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்றிரவு எனக்குக் கனவு ஒன்று காட்டப்பட்டது...” என்று கூறினார்கள். தொடர்ந்து அறிவிப்பாளர் முழு ஹதீஸையும் அறிவிக்கிறார்.16 இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லது அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாக வந்துள்ளது. இதே ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் முதலில் இந்த ஹதீஸை (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) அறிவிக்காமல் இருந்தார்கள்; பின்புதான் அறிவிக்கலானார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى، حدثنا الليث، عن يونس، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله، ان ابن عباس، كان يحدث ان رجلا، اتى رسول الله صلى الله عليه وسلم فقال اني اريت الليلة في المنام، وساق الحديث. وتابعه سليمان بن كثير وابن اخي الزهري وسفيان بن حسين عن الزهري عن عبيد الله عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم. وقال الزبيدي عن الزهري عن عبيد الله ان ابن عباس او ابا هريرة عن النبي صلى الله عليه وسلم. وقال شعيب واسحاق بن يحيى عن الزهري كان ابو هريرة يحدث عن النبي صلى الله عليه وسلم وكان معمر لا يسنده حتى كان بعد
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن اسحاق بن عبد الله بن ابي طلحة، انه سمع انس بن مالك، يقول كان رسول الله صلى الله عليه وسلم يدخل على ام حرام بنت ملحان، وكانت تحت عبادة بن الصامت، فدخل عليها يوما فاطعمته، وجعلت تفلي راسه، فنام رسول الله صلى الله عليه وسلم ثم استيقظ وهو يضحك. قالت فقلت ما يضحكك يا رسول الله قال " ناس من امتي عرضوا على، غزاة في سبيل الله، يركبون ثبج هذا البحر، ملوكا على الاسرة او مثل الملوك على الاسرة ". شك اسحاق. قالت فقلت يا رسول الله ادع الله ان يجعلني منهم، فدعا لها رسول الله صلى الله عليه وسلم ثم وضع راسه ثم استيقظ وهو يضحك. فقلت ما يضحكك يا رسول الله قال " ناس من امتي عرضوا على، غزاة في سبيل الله ". كما قال في الاولى. قالت فقلت يا رسول الله ادع الله ان يجعلني منهم. قال " انت من الاولين ". فركبت البحر في زمان معاوية بن ابي سفيان فصرعت عن دابتها حين خرجت من البحر، فهلكت