Loading...

Loading...
நூல்கள்
௮௪ ஹதீஸ்கள்
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘எனக்கு குர்ஆனை ஓதிக்காட்டுக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான், ‘‘தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘பிறரிடமிருந்து அதைக் கேட்க நான் பெரிதும் ஆசைப்படுகிறேன்” என்று சொன்னார்கள். நான், ‘அந்நிசா’ எனும் (4ஆவது) அத்தியாயத்தை ஓதினேன். ‘‘ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களுடைய நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்போதும், (நபியே!) உம்மை இவர்களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டுவரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?” எனும் (4:41ஆவது) வசனத்தை நான் அடைந்தபோது ‘நிறுத்துங்கள்’ என்று நபியவர்கள் சொன்னார்கள். அப்போது அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிவதை நான் கண்டேன்.65 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا صدقة، اخبرنا يحيى، عن سفيان، عن سليمان، عن ابراهيم، عن عبيدة، عن عبد الله، قال يحيى بعض الحديث عن عمرو بن مرة، قال لي النبي صلى الله عليه وسلم. حدثنا مسدد عن يحيى عن سفيان عن الاعمش عن ابراهيم عن عبيدة عن عبد الله قال الاعمش وبعض الحديث حدثني عمرو بن مرة عن ابراهيم وعن ابيه عن ابي الضحى عن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم " اقرا على ". قال قلت اقرا عليك وعليك انزل قال " اني اشتهي ان اسمعه من غيري ". قال فقرات النساء حتى اذا بلغت {فكيف اذا جينا من كل امة بشهيد وجينا بك على هولاء شهيدا}. قال لي " كف او امسك ". فرايت عينيه تذرفان
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘எனக்கு குர்ஆனை ஓதிக்காட்டுக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அதற்கு நான், ‘‘தங்கள்மீதே குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக்காட்டுவதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘பிறரிடமிருந்து அதைக் கேட்க நான் விரும்புகிறேன்” என்று சொன்னார்கள்.66 அத்தியாயம் :
حدثنا قيس بن حفص، حدثنا عبد الواحد، حدثنا الاعمش، عن ابراهيم، عن عبيدة السلماني، عن عبد الله رضى الله عنه قال قال لي النبي صلى الله عليه وسلم " اقرا على ". قلت اقرا عليك وعليك انزل قال " اني احب ان اسمعه من غيري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் குறைந்த வயது கொண்ட இளைஞர்களாயிருப் பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர் களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள், வேட்டைப் பிராணியி(ன்உடலி)லிருந்து (வேடன் எய்த) அம்பு (அதன் உடலுக்குள் பாய்ந்து மறுபுறமாக) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிடுவார்கள். அவர்களது இறைநம்பிக்கை(யும் மார்க்க விசுவாசமும்) அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயம்வரை) செல்லாது. ஆகவே, அவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களை ஒழிப்பது, அவர்களைக் கொன்றவர்களுக்கு மறுமை நாளில் நற்பலனாக அமையும்” என்று சொன்னார்கள். இதை அலீ (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.67 அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، حدثنا الاعمش، عن خيثمة، عن سويد بن غفلة، قال علي رضى الله عنه سمعت النبي صلى الله عليه وسلم يقول " ياتي في اخر الزمان قوم حدثاء الاسنان، سفهاء الاحلام، يقولون من خير قول البرية، يمرقون من الاسلام كما يمرق السهم من الرمية، لا يجاوز ايمانهم حناجرهم، فاينما لقيتموهم فاقتلوهم، فان قتلهم اجر لمن قتلهم يوم القيامة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களிடையே ஒரு கூட்டத்தார் கிளம்புவார்கள். அவர்களது தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களது நோன்புடன் உங்களுடைய நோன்பையும், அவர்களின் நற்செயல்களுடன் உங்களின் நற்செயல்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகை, நோன்பு மற்றும் நற்செயல்களை அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவுக்கு அவர்களது வழிபாடு களை கட்டியிருக்கும்.) மேலும், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபுறம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிவிடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் ஏதுமிருக்கிறதா என்று) அம்பின் முனையைப் பார்ப்பார். அதில் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்ப்பார். அதிலும் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு அம்பின் இறகைப் பார்ப்பார். அதிலும் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். அம்பி(ன் முனை’)ல் நாணைப் பொருத்தும் இடம் தொடர்பாகவும் (அது வேட்டைப் பிராணியைத் தைத்ததா) என்று சந்தேகம் கொள்வார். (அந்த அளவுக்கு அம்பில் எந்தச் சுவடும் இராது.) இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.68 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن يحيى بن سعيد، عن محمد بن ابراهيم بن الحارث التيمي، عن ابي سلمة بن عبد الرحمن، عن ابي سعيد الخدري رضى الله عنه انه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " يخرج فيكم قوم تحقرون صلاتكم مع صلاتهم، وصيامكم مع صيامهم، وعملكم مع عملهم، ويقرءون القران لا يجاوز حناجرهم، يمرقون من الدين كما يمرق السهم من الرمية، ينظر في النصل فلا يرى شييا، وينظر في القدح فلا يرى شييا، وينظر في الريش فلا يرى شييا، ويتمارى في الفوق
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதி அதன்படி செயலும் ஆற்றக்கூடிய இறைநம்பிக்கையாளர் நாரத்தைப் பழம் போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம் (பழம்) போன்றவர். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணமில்லை. குர்ஆனை ஓதுகின்ற நயவஞ்சகனின் நிலை, துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் ‘கசப்பானது’ அல்லது ‘அருவருப்பானது.’ அதன் வாடையும் வெறுப்பானது. இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.69 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن شعبة، عن قتادة، عن انس بن مالك، عن ابي موسى، عن النبي صلى الله عليه وسلم قال " المومن الذي يقرا القران ويعمل به كالاترجة، طعمها طيب وريحها طيب، والمومن الذي لا يقرا القران ويعمل به كالتمرة، طعمها طيب ولا ريح لها، ومثل المنافق الذي يقرا القران كالريحانة، ريحها طيب وطعمها مر، ومثل المنافق الذي لا يقرا القران كالحنظلة، طعمها مر او خبيث وريحها مر
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டி ருக்கும்வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று)விடுங்கள்.70 இதை ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد، عن ابي عمران الجوني، عن جندب بن عبد الله، عن النبي صلى الله عليه وسلم قال " اقرءوا القران ما ايتلفت قلوبكم، فاذا اختلفتم فقوموا عنه
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டி ருக்கும்வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று)விடுங்கள். இதை ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا سلام بن ابي مطيع، عن ابي عمران الجوني، عن جندب، قال النبي صلى الله عليه وسلم " اقرءوا القران ما ايتلفت عليه قلوبكم فاذا اختلفتم فقوموا عنه ". تابعه الحارث بن عبيد وسعيد بن زيد عن ابي عمران ولم يرفعه حماد بن سلمة وابان. وقال غندر عن شعبة عن ابي عمران سمعت جندبا قوله. وقال ابن عون عن ابي عمران عن عبد الله بن الصامت عن عمر قوله، وجندب اصح واكثر
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதை நான் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரது கையைப் பிடித்து நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றேன். (விவரத்தை விசாரித்தறிந்த) நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்” என்று கூறிவிட்டு, (ஒவ்வொருவரையும் பார்த்து, ‘‘அவ்வாறே) ஓதுங்கள்!” என்றார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், ‘‘(வேற்றுமை கொள்ளாதீர்கள்!) ஏனெனில், உங்களுக்கு முன்னிருந்தவர்கள் (இப்படித்தான்) வேறுபட்டனர். அது அவர்களை அழித்துவிட்டது” என்று கூறியதாகவே பெரும்பாலும் நான் கருதுகிறேன். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن عبد الملك بن ميسرة، عن النزال بن سبرة، عن عبد الله، انه سمع رجلا، يقرا اية، سمع النبي صلى الله عليه وسلم خلافها، فاخذت بيده فانطلقت به الى النبي صلى الله عليه وسلم فقال " كلاكما محسن فاقرا اكبر علمي قال فان من كان قبلكم اختلفوا فاهلكهم