Loading...

Loading...
நூல்கள்
௨௧ ஹதீஸ்கள்
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் எனக்கு இப்னு அபீ ஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் வைத்துத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். (எங்கள்) இருவரின் குரல்களும் உயர்ந்தன. வீட்டிலிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கேட்டு விட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். தமது அறையின் திரையை விலக்கி, ‘கஅபே!’ என்றழைத் தார்கள். நான், ‘‘இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘பாதிக் கடனைத் தள்ளுபடி செய்துவிடு’ என்று தம் கரத்தால் சைகை காட்டினார்கள். ‘‘அவ்வாறே செய்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கூற, இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்களிடம், ‘‘நீங்கள் எழுந்து சென்று அவரது கடனை அடையுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.10 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا عثمان بن عمر، اخبرنا يونس،. وقال الليث حدثني يونس، عن ابن شهاب، اخبرني عبد الله بن كعب، ان كعب بن مالك، اخبره انه، تقاضى ابن ابي حدرد دينا كان له عليه في عهد رسول الله صلى الله عليه وسلم في المسجد، فارتفعت اصواتهما حتى سمعها رسول الله صلى الله عليه وسلم وهو في بيت، فخرج رسول الله صلى الله عليه وسلم اليهما حتى كشف سجف حجرته، فنادى كعب بن مالك فقال " يا كعب ". فقال لبيك يا رسول الله. فاشار بيده ان ضع الشطر. فقال كعب قد فعلت يا رسول الله. فقال رسول الله صلى الله عليه وسلم " قم فاقضه